health
சத்துக்களின் பொக்கிஷமான முந்திரி பருப்பில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.
தினமும் 3 முதல் 4 முந்திரி பருப்புகளை உண்பதால் எலும்புகள் வலுவடையும். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
முந்திரியை உண்பதால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு குறையும்.
வாரத்திற்கு நான்கு தடவைக்கு மேலாக முந்திரிப் பருப்பை சாப்பிட்டால் இதய நோயின் ஆபத்து 37% குறைய வாய்ப்பு என்பது ஆய்வின் தகவல்.
முந்திரி இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
முந்திரியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும். முந்திரியின் அதிக கலோரி உடல் பருமனை உண்டாக்கும்.
முந்திரியில் மெக்னீசியம், கால்சியம் உள்ளன. இவை சிறுநீரக கல் பிரச்சனைகளை மோசமாக்கும்.
முந்திரியில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அவை கரைவதற்கு உடலில் இருக்கும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினை வரும்.
முந்திரியை அதிகமாக உண்பதால் சிலருக்கு தலைவலி, ஒவ்வாமை பிரச்சனை வரலாம்.
ஒரு நாளில் அதிகபட்சமாக 18 முந்திரி பருப்புகளை உண்ணலாம். அதுவே முந்திரியின் நன்மைகளை பெறவும் பக்கவிளைவுகளை தவிர்க்கவும் ஒரே வழி.
உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைக்க கிராம்பு தேநீர் குடிங்க..
இந்த பழத்தை சாப்பிட்டால் ஆயுசுக்கும் சுகர், மாரடைப்பு பிரச்சனையே வராது
நீச்சல் பயிற்சிக்கு போறீங்களா? நீங்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்
செக்க செவந்த முகத்திற்கு 4 வகையான குங்குமப்பூ பேஸ் பேக்!