health
கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக நீச்சல் பயிற்சி எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
நீச்சலுக்கு முன் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலை மந்தமாக்கிவிடும்.
நீச்சல் அடிக்கும் முன் பால் பொருள்கள் வேண்டாம். இதில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. செரிமான பிரச்சனை வரும்.
நீச்சல் பயிற்ச்சிக்கு முன்பு காபி குடிக்க வேண்டாம். இது டையூரிடிக் என்பதால், நீரிழப்பு உணர்வை ஏற்படுத்தலாம். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
நீச்சல் குளத்தில் நீராடுவதற்கு முன் சர்க்கரை கலந்த பானங்கள் அருந்துவதால், நீச்சலுக்குப் பிறகு மந்தமாகவும், சோர்வாகவும் உணர்வீர்கள்.
நார்ச்சத்து உள்ள பருப்பு வகை, பீன்ஸ், ப்ரோக்கோலி எளிதில் ஜீரணிக்காது. நீச்சலுக்கு முன் உண்ண வேண்டாம்.
நீந்தும்போது உடல் கிடைமட்ட நிலையில் இருப்பதால், அமில வீக்கத்திற்கு ஆளாகுவோம். அதிக காரமான உணவு சாப்பிட்டால் உடலை பாதிக்கும்.
உலர் பழங்கள், பாதம், முந்திரி பருப்பு, பழங்கள் உண்ணலாம். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
புரதம், சிக்கன், பனீர், பிரவுன் ரைஸ், நட்ஸ் ஆகியவை உண்ணலாம்.
செக்க செவந்த முகத்திற்கு 4 வகையான குங்குமப்பூ பேஸ் பேக்!
பிரியாணி இலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!
கொத்தவரங்காயில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!!
சமோசா உள்பட 7 இந்திய உணவுகளுக்கு வெளிநாட்டில் தடை! ஏன் தெரியுமா?