கர்ப்ப காலத்தில் சிக்கனை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் முற்றிலும் பாதுகாப்பானது. சிக்கனில் புரதம் நிறைந்துள்ளதால், தாய் மற்றும் குழந்தைக்கு நன்மை பயக்கும்.
சிக்கனில் உயர்தர புரதம் உள்ளதால் இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் தாய்க்கு ஆற்றலை வழங்கும்.
சரியாக சமைக்காத அல்லது கெட்டுப் போன கோழியை சாப்பிட்டால் தொற்று நோய் அபாயம் அதிகரிக்கும். எனவே கோழியை நன்கு சுத்தம் செய்து, முறையாக சமைத்து சாப்பிடவும்.
கர்ப்ப காலத்தில் காரமான அல்லது வறுத்த கோழியை சாப்பிட்டால் வாயு, அமலத்தன்மையை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் தினமும் கோழி சாப்பிடக்கூடாது. வாரத்திற்கு 2-3 முறை சாப்பிடலாம். அதுபோல தேவைக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானத்தில் மோசமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நல பிரச்சினைகள் இருந்தால் சிக்கன் சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
நம்பகமான இடத்தில் கோழி வாங்குங்கள் .அதுபோல ஃப்ரிட்ஜில் நீண்ட நேரம் கோழியை வைக்க வேண்டாம்.