தரையில் தூங்கினால் முதுகுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. அதாவது, தரையில் தூங்குவது முதுகு வலியை போக்கும் என்றும் கூறப்படுகிறது.
Image credits: unsplash
Tamil
உடலை குளிர்ச்சியாக்கும்
மெத்தையில் தூங்கினால் உடல் வெப்பமடைந்து தூக்கம் பாதிக்கப்படும். அதுவே தரையில் தூங்கினால் உடல் குளிர்ச்சியடைந்து நன்றாக தூங்க உதவும்.
Image credits: Pinterest
Tamil
முதுகெலும்புக்கு நல்லது
மெத்தையில் தூங்கினால் முதுகுவலி உட்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் தரையில் தூங்கினால் முதுகெலும்புக்கு இதமளிக்கும், உடல்நிலை மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
அசெளகரியம் ஏற்படாது!
தரையில் தூங்கினால் அசெளகரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அழுத்த புள்ளிகள் உருவாவது குறைவதாகச் சொல்லப்படுகின்றது.
Image credits: adobe stock
Tamil
தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்!
மெத்தையில் தூங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால் தரையில் தூங்குங்கள். நன்றாக தூங்க உதவும். தூக்கமின்மை பிரச்சனை வராது.
Image credits: Pexels
Tamil
படுக்கை மற்றும் தலையணை
வெறும் தரையில் தூங்காமல் ஒரு பாய் விரித்து தூங்குங்கள். அதுபோல உங்களது தலை, கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு நல்ல தோரணையை பராமரிக்க மென்மையான தலையணை பயன்படுத்துங்கள்.
Image credits: Pexels
Tamil
தரையை சுத்தமாக வைத்துக்கொள்!
தரையில் படுக்கும் முன் தரையை சுத்தம் செய்யுங்கள். தரையில் தூசி மற்றும் அழுக்குகள் இருந்தால் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும்.