சர்க்கரை பலரது அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. பலரால் சர்க்கரையை தவிர்ப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
அதிகப்படியான சர்க்கரை வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும். சர்க்கரையை தவிர்த்தால் நீரிழிவு அபாயம் குறையும்.
அதிகப்படியான சர்க்கரை எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். சர்க்கரையை குறைத்தால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும். இதனால் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகள் வராது.
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்தும். சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைக்கலாம்.
சர்க்கரையை தவிர்த்தால் பல் சிதைவு அபாயம் குறையும். மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிகப்படியான சர்க்கரை கல்லீரல் பிரச்சினையை ஏற்படுத்தும். சர்க்கரையை தவிர்த்தால் கல்லீரல் பிரச்சினை வருவது தடுக்கப்படும்.
இரத்தசோகை சரிசெய்யும் 7 சிறந்த பானங்கள்
இந்த 7 சிவப்பு உணவுகள் யூரிக் ஆசிட்டை குறைக்கும்
அயோடின் குறைபாடு: உடலில் ஏற்படும் அறிகுறிகள்!
வேலைக்குப் போற பெண்கள் ஒரே மாதத்தில் எடை குறைய சிம்பிள் டயட் டிப்ஸ்