health
கொத்தமல்லியில் இரும்புச்சத்து மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நியாசின், கரோட்டின் மற்றும் தியாமின் உள்ளன.
கொத்தமல்லியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைகளை போக்கும். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
கொத்தமல்லியில் ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கொத்தமல்லியில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளதால், முடி உதிர்தல் குறையும் மற்றும் முடி உடைவது தடுக்கப்படும்.
கொத்தமல்லி தண்ணீர் தினமும் குடித்து வந்தால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.
கொத்தமல்லியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், நீரை தினமும் குடித்து வந்தால் சருமம் பளபளப்பாகும் மற்றும் மென்மையாகும்..