health

வெப்பம் குறைக்கும்

வெற்றிலையில் குறைந்த கலோரியும், கொழுப்பும் உள்ளது. இதில் அதிக ஈரப்பதம் இருப்பதால் கோடையில் நல்ல நீர் ஆதாரமாக உள்ளது. 

Image credits: Getty

மூக்கில் இரத்தப்போக்கு

கோடை வெப்பத்தின் தாக்கத்தால் சிலருக்கு மூக்கில் இருந்து இரத்தம் வரும். வெற்றிலை இதை நிறுத்த உதவுகிறது. 

Image credits: Getty

தோல் பிரச்சனை

வெற்றிலையில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் கரும்புள்ளி, முகப்பரு, வறண்ட சரும பிரச்சனையை குறைக்கும். 

Image credits: Getty

வெற்றிலை ஊட்டச்சத்துக்கள்

வெற்றிலையில் கால்சியம், வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், தயாமின், நியாசின், கரோட்டின் ஆகிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

Image credits: Getty

வலி நிவாரணம்

வெற்றிலையை அரைத்து காயங்களில் தடவலாம். வெற்றிலையின் சாறு வலி, வீக்கம் குறைக்க உதவும். 

Image credits: Getty

செரிமானத்தை மேம்படுத்தும்

சாப்பாட்டுக்கு பிறகு வெற்றிலை மென்று சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். 

Image credits: Getty

வாய் சுகாதாரம்

வாய் துர்நாற்றம், பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட வெற்றிலையை மென்று தின்னலாம். 

Image credits: Getty

எடை குறைப்பு

வெற்றிலை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினம் உண்ணலாம். 

Image credits: Getty

வாய் புற்றுநோய் தடுப்பு

புகையிலை இல்லாமல் வெற்றிலை சாப்பிட்டால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். உடலின் மற்ற உறுப்புகளுக்கு புற்று செல்கள் பரவுவதைத் தடுக்கும். 

Image credits: Getty

உடல் ஆரோக்கியம்

வெற்றிலை உண்பதால் மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகள் பலப்படும். குழந்தைகளுக்கு ஞாபக ஆற்றல் கூடும். 

Image credits: Getty
Find Next One