health

சுக்கின் நன்மைகள்

இஞ்சியை விட சுக்கு சிறந்ததா? சுக்கு உண்பதால் கிடைக்கும் அற்புதமான மருத்துவ நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

சளி, காய்ச்சல் எதிர்ப்பு

சூடான நீரில் சுக்கு பொடி கலந்து குடிப்பதால் சளி, இருமல் பிரச்சனைகள் குணமாகும். 

உடல் எடை

சுக்கு நமது வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தி, கொழுப்பு உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். 

மூட்டு வலி

சுக்கு நீர் குடிப்பதால் மூட்டுகளி உள்ள கொடும் வலி, வீக்கம் குணமாகும். 

மாதவிடாய் வலி

மாதவிடாய் காலத்தில் சுக்கு தண்ணீர் அருந்தலாம். இதனால் வலி குறையும். 

நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

சுக்கில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது. 

தொண்டைக்கு இதம்

சுக்கு கசாயம் குடிப்பதால் தொண்டைக்கு இதமாக இருக்கும். வறட்டு இருமலுக்கு நல்லது. 

செரிமானம் மேம்படும்

சுக்கு உடலின் நச்சு நீக்கி. அஜீரண பிரச்சனை கோளாறு இருந்தால், தினமும் காலையில் சுக்கு நீர் பருகலாம். 

சுக்கு நீர் செய்முறை

தேவைக்கேற்ப சுக்கு பொடி, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். இதை தேன் கலந்து குடித்தால் போதும். 

மருத்துவர் ஆலோசனை

அடிக்கடி சுக்கு உண்ணும் முன், ஒரு மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 

கர்ப்ப கால மன அழுத்தம் ஏன் வருகிறது? குறைப்பதற்கான வழிகள் என்ன?