தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் அளவை பராமரிக்கவும், கணையத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் இதை ஜூஸாக அல்லது காய்கறியாக உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். எனவே இதை பாலில் அல்லது உணவில் என பல வழிகளில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ராகியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிகளவு இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உணவு மட்டும் போதாது தினமும் வாக்கிங், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, நல்ல தூக்கம் ஆகியவையும் முக்கியம்.
மேலே சொன்ன ஆயுர்வேத உணவுகள் அனைத்தையும் சரியான அளவில் மற்றும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும்.