வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்களின் 7 அற்புதமான நன்மைகள்
ஊறுகாய்களில் மறைந்திருக்கும் நன்மைகள்
டயட் பாலோ பண்றவங்க பல பேர் ஊறுகாயை சேர்த்துக்க மாட்டாங்க. ஆனா, ஒரு சின்ன அளவு ஊறுகாய் சாப்பிடுறதுல பல நன்மைகள் இருக்கு.
சத்துக்கள் நிறைந்த ஊறுகாய்
காய்கறிகள் மற்றும் பழங்கள்ல இருந்து தயாரிக்கப்படுற ஊறுகாய்கள்ல பாஸ்பரஸ், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் இருக்கு.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊறுகாய்
ஊறுகாய்கள் வினிகர் மற்றும் எண்ணெயில் ஊறவைத்து நீண்ட நாட்களுக்கு வைக்கப்படுவதால், ஊறுகாய்களில் நொதித்தலின் நன்மைகள் கிடைக்கிறது. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
ஊறுகாய்களில் புரோபயாடிக்குகள் உள்ளன. ஊறுகாய் சாப்பிடுவது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக்குகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது
ஒரு சிறிய அளவு ஊறுகாய் சாப்பிடுவது வயிற்றை விரைவாக நிரப்புகிறது. இது அடிக்கடி பசியைத் தடுக்கிறது. இதனால், இன்சுலின் அளவு குறைகிறது.
செல்களைப் பாதுகாக்கிறது
ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலின் செல்களை சேதப்படுத்துகின்றன. ஊறுகாய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கின்றன.
தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம்
சில விளையாட்டு வீரர்கள் தசைப்பிடிப்பைப் போக்க ஊறுகாய் சாற்றைக் குடிப்பார்கள். இது எலக்ட்ரோலைட் குறைபாட்டை ஈடுசெய்யும் திறன் கொண்டது.