Food
போதுமான அளவு சாப்பிடாமல் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காது.
பசியின்மை அல்லது உணவு கட்டுப்பாடு ஆகியவற்றால் குறைவாக சாப்பிட்டால் உடல்நல பிரச்சினைகள் வரும்.
போதுமான உணவு எடுக்காவிட்டால் உடலில் போதிய ஆற்றல் இருக்காது. உடல் சோர்வு ஏற்படும்.
வயிற்றுக்கு போதுமான உணவை சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஹார்மோன் மாற்றம் வரும். இதனால் பசி அதிகமாகும்.
கலோரிகள், புரதம் உடலுக்கு போதுமான அளவு கிடைக்காவிட்டால் முடி உதிரும் பிரச்சனை வரும்.
வெகுநாட்கள் குறைவாக சாப்பிட்டால் எரிச்சலான மனநிலை வரும்.
குறைவான உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் வெப்பநிலையை குறைக்கும். T3 தைராய்டு ஹார்மோனின் குறைந்த அளவும் காரணம்.
ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருக்கும். நீங்கள் குறைவாக உண்பதால் தூக்கக் கோளாறு ஏற்படுகிறது.
எப்போதும் குறைவாக சாப்பிட்டால் மலச்சிக்கல் வரலாம். உணவின் மெதுவான இயக்கம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட்ஸ் ஆகிய ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். மூளையின் செயல்திறன் குறையும்.
உடல் எடை குறைக்க போதுமான அளவு சாப்பிடாமல் இருக்கக் கூடாது. சமச்சீரான உணவு பழக்கம் தேவை.