வெல்லம் டீயானது தயாரிப்பது மிக எளிது. தனி சிறப்பு கொண்ட இந்த டீயானது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. வெல்லம் டீ தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
1 கப் பால், 1/2 கப் தண்ணீர், 2 ஸ்பூன் டீ தூள், 2-3 ஸ்பூன் வெல்லம், 1- கிராம்பு ஏலக்காய், 1 துண்டு இஞ்சி
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு இஞ்சி இடித்து சேர்க்கவும். பிறகு ஏலக்காய், கிராம்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின் வெல்லம் சேர்க்கவும். பிறகு பால் சேர்க்கவும். இப்போது தேயிலை துளை சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இறுதியாக வடிகட்டவும். அவ்வளவுதான் சூடான வெல்லம் டீ ரெடி!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எடையை குறைக்க உதவும், செரிமானத்தை மேம்படுத்தும், மன அழுத்தத்தை குறைக்கும், குளிர்காலத்தில் சூடாக உணர வைக்கும்.
எடையை அதிகரிக்கும், சர்க்கரை அளவைக் கூடும், சிலருக்கு அலர்ஜி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
வெல்லம் டீயை அதிகமாக குடிக்க கூடாது. சர்க்கரை நோய், அலர்ஜி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த டீயை குடிக்கவே கூடாது. கோடையில் இந்த டீ குடித்தால் உடல் சூட்டை அதிகரிக்கும்.