கார்போஹைட்ரேட்டுகள் ஜவ்வரிசியில் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்கும். மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் சுத்தமாகவே இல்லை.
காலை உணவாக ஜவ்வரிசியை வேக வைத்து அல்லது வறுத்து சாப்பிடலாம். இது நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைக்கும் மற்றும் அதிகமாக சாப்பிடும் விருப்பத்தை குறைக்கும்.
ஜவ்வரிசி ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதால் உங்களது வயிறை நீண்ட நேரம் நிரம்பி வைக்கும். இதனால் அடிக்கடி சாப்பிடுவதைத் தடுத்து எடையை கட்டுப்படுத்தும்.
ஜவ்வரிசியை உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை வழங்கும். உடற்பயிற்சிக்கு பின் தயிர் (அ) பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் தசை மீட்புக்கு உதவும்.
ஜவ்வரிசியை கொண்டு கிச்சடி (அ) உப்புமா தயாரிக்கும் போது குறைந்த எண்ணெய், அதிக பச்சை காய்கறிகளை பயன்படுத்தி சமைக்கவும். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும், கலோரிகள் அளவு குறையும்.
இரவு ஜவ்வரிசி சாப்பிட்டால் செரிமானத்தை மெதுவாக்கும். எனவே இரவு நேரத்தில் அதை சாப்பிட வேண்டாம். காலை அல்லது மதியம் சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகும்.
எடையை குறைக்க ஜவ்வரிசியை தினமும் ஒரு கிண்ணம் சாப்பிட்டால் போதும். அதிகமாக சாப்பிட்டால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.