Food
உருளைக்கிழங்கு, கேரட், கிவி, பீட்ரூட், சுரைக்காய், போன்றவை தோலுடன் உண்ண ஏற்றவை. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகும்.
தோலுடன் பயன்படுத்தும் காய்கறிகளை உப்பு நீரில் கழுவுவது அதில் உள்ள பூச்சிக்கொல்லிகளை அகற்ற உதவும்.
பீட்ரூட், சுரைக்காய், கேரட் போன்றவற்றின் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமுள்ளது. அவற்றை தோல் நீக்கி சாப்பிடக் கூடாது.
சில காய்கறிகள், பழங்களை தோலை நீக்கி உண்ண ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தோலில் படிந்த பூச்சிக்கொல்லி, நச்சுக்கிருமிகளை நீக்கவும், உணவில் சுவையை கூட்டவும், செரிமானத்தை எளிமையாக்கவும் தோலை நீக்க வேண்டும்.
கடினமான தோலை ஜீரணிக்க முடியாமல் வயிற்றில் வீக்கம், அஜீரணம், குடல் பிரச்சினை வரலாம். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பழங்கள், காய்கறிகளை தோல் நீக்கி உண்ணுங்கள்.
மாம்பழங்களின் மீது ரசாயனங்கள் படிந்திருக்கும். தோல்களும் கடினமானவை. அதனால் தோல் நீக்கி உண்ணுங்கள்.
வெள்ளரிக்காய் கோடைகாலத்தில் உடலுக்கு நல்லது. ஆனால் அதன் மீதுள்ள பூச்சிக்கொல்லிகள் காரணமாக தோல் நீக்கி உண்பது நல்லது.
பூசணியை தோல் நீக்கி சமைக்கலாம். அதன் சத்துக்களை முழுமையாக பெற சாப்பிடுவதற்கு முன்பு தோலை நீக்குவது நல்லது.