Food
மதிய உணவிற்கு சாதத்திற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடுவது வயிற்று கொழுப்பைக் குறைக்கும். எடை இழப்புக்கு உதவும்.
சாதம் இல்லாமல் சாப்பிட முடியாதவர்கள், சாதத்தின் அளவைக் குறைத்து, அதனுடன் ஒரு முட்டை சாப்பிடலாம்.
நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த கலோரிகள் குறைவான ஆப்பிளை சாப்பிடுவதும் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும்.
கேரட் மிகக் குறைந்த கலோரி உள்ள காய்கறி. மதிய உணவிற்கு சப்பாத்தியுடன் இதைச் சாப்பிடுவது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
பீட்ரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகள் மிகக் குறைவு. பீட்ரூட் சாப்பிடுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவும்.
மதிய உணவிற்கு ஓட்ஸ் சாப்பிடுவது நன்மை பயக்கும். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், எடை இழப்புக்கு உதவும்.
எடை இழக்க விரும்புபவர்கள் மதிய உணவிற்கு தயிர் சாப்பிடுவது பற்றி யோசிக்க வேண்டும். இது உடலில் சேமிக்கப்படும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்.
உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகிய பின்னரே உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.