Food

சளித்தொல்லை நீங்க இருமல் குணமாக வெற்றிலை ரசம் இதோ..

Image credits: seema

வெற்றிலை ரசம்

சளி, இருமல் தொல்லையை நீக்கக்கூடிய மருத்துவ குணம் வெற்றிலையில் உள்ளது. எனவே வெற்றிலையை வைத்து எப்படி ரசம் செய்வது என்று இங்கு பார்க்கலாம்

Image credits: Getty

தேவையான பொருட்கள் -1

வெற்றிலை - 6, மஞ்சள் தூள், தனியாத்தூள், வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுப்பொடி சீரகப்பொடி இவை அனைத்தும் 1 தேக்கரண்டி.

Image credits: Getty

தேவையான பொருட்கள் - 2

பழுது தக்காளி 2, கடுகு சிறிதளவு, உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.

Image credits: Getty

செய்முறை - 1

முதலில் வெற்றிலை மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதேசமயம் புளியை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

Image credits: Getty

செய்முறை - 2

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டவும். பின் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

செய்முறை - 3

தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், புளி கரைசல் மற்றும் பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை நன்கு கொதிக்க வேண்டும்.

Image credits: Getty

செய்முறை - 4

அதேசமயம் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின் தனியா தூள் மிளகு, சீரகப்பொடி ஆகியவற்றை நன்கு வதக்கி கொள்ளுங்கள். 

Image credits: Getty

செய்முறை - 5

பின் அவற்றை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். உடனே நறுக்கி வெற்றிலையை இவற்றில் சேர்த்து மூடி வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

Image credits: Getty

வெற்றிலை ரசம் ரெடி

சூப்பரான வெற்றிலை ரசம் தயாராகிவிட்டது. பின் சூடான சாதத்துடன் ஊற்றி சாப்பிடுங்கள். இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

Image credits: madu samayal
Find Next One