Food

ப்ரக்கோலி சாப்பிடுங்க எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்!!


 

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியம்

ப்ரக்கோலியில் கால்சியம், வைட்டமின் கே நிறைந்துள்ளதால், அவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,  எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

Image credits: Getty

புற்றுநோயைத் தடுக்க

ப்ரக்கோலியில் சல்போராபேன் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty

சரும அழகு பெற

ப்ரக்கோலியில் குளுக்கோராபானின், வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
 

Image credits: freepik

உடல் எடை குறைக்க

இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், ப்ரோக்கோலி உடல் எடை குறைப்புக்கு சிறந்த காய்கறியாகும்.

Image credits: others

முடியை பலப்படுத்தும்

ப்ரக்கோலியில் வைட்டமின் பி, சி நிறைந்துள்ளதால், அவை முடியை வேர்களில் இருந்து பலப்படுத்தி, முடியை அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.

Image credits: Our own

மூளை ஆரோக்கியம்

ப்ரக்கோலியில் வைட்டமின் கே உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மூளை ஆரோக்கிய பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது.
 

Image credits: Getty

இதய ஆரோக்கியம்

ப்ரக்கோலி இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image credits: Getty

பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!!

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் நன்மைகள் பல கிடைக்கும்!!

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

உயரமாக வளர்வதற்கான சூப்பர்ஃபுட்கள் இதோ..!!