Tamil

பாத தசைகளை வலுப்படுத்தவும் சமநிலையை மேம்படுத்தவும் எளிய பயிற்சிகள்

Tamil

டென்னிஸ் பந்து பயிற்சி (Tennis Ball Exercise):

நாற்காலியில் அமர்ந்து, பாதத்தின் அடியில் டென்னிஸ் பந்தை வைத்து முன்னும் பின்னும் உருட்டவும். இது பாதத்தின் வளைவுப் பகுதி இறுக்கத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

Image credits: Getty
Tamil

வெறும் காலில் நடத்தல் (Barefoot Walking):

வீட்டிற்குள்ளோ புல்வெளியிலோ வெறும் காலில் நடப்பது பாதத் தசைகளுக்குச் சிறந்த மசாஜ் ஆகும். இது நரம்புகளைத் தூண்டி, தசைகளை இயற்கையாகவே வலுவாக்க உதவுகிறது. 

Image credits: Getty
Tamil

கால் விரல் நீட்சி (Toe Extension):

கால்களை நீட்டி அமர்ந்து, கால் விரல்களை உங்கள் பக்கம் இழுக்கவும். இது பாதத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் பிளான்டர் ஃபாஸியா (Plantar Fascia) வலிக்குச் சிறந்த தீர்வாகும்.

Image credits: Getty
Tamil

மார்பிள் அல்லது பந்து பிடிப்பு (Marble/Ball Grasp):

தரையிலுள்ள கோலிகள் அல்லது பந்துகளைக் கால் விரல்களால் மட்டும் எடுத்து கிண்ணத்தில் போடவும். இது விரல்களின் பிடிமானத்தையும் தசைகளையும் வலுப்படுத்தும் எளிய பயிற்சியாகும்.

Image credits: Getty
Tamil

துண்டு சுருட்டும் பயிற்சி (Towel Curls):

தரை விரிப்பில் குதிங்காலை ஊன்றி, விரல்களால் மட்டும் துண்டைச் சுருட்டி இழுக்கவும். இது பாத வளைவுகளை (Arch) வலுப்படுத்தும் எளிய மற்றும் சிறந்த பயிற்சியாகும்.

Image credits: Getty

30+ வயதில் உடற்பயிற்சி: நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விதிகள்!

Heat wave : கடும் வெயிலில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க 6 எளிய வழிகள்!

Weight Loss: தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? பலரும் அறியாத உண்மை!

மாலை நேர உடற்பயிற்சியின் 6 நன்மைகள்!