தேனை முகத்தில் இப்படி யூஸ் பண்ணா இளமையா இருப்பீங்க!
health-beauty May 01 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
முகத்திற்கு தேன்
நீங்கள் தேனை முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும். ஆனால் சுத்தமான தேனை மட்டுமே பயன்படுத்துங்கள்.
Image credits: Freepik
Tamil
தேன் மற்றும் பால்
1 ஸ்பூன் தேனில் 2 ஸ்பூன் பச்சை பால் கலந்து முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து பிறகு கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமாகவும், பளபளப்பாகவும் மாறும்.
Image credits: pixels
Tamil
தேன் மற்றும் கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் மற்றும் தேன் இரண்டையும் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கலந்து பிறகு முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்தை மென்மையாக்கும் மற்றும் சுருக்கங்களை குறைக்கும்.
Image credits: Pinterest
Tamil
தேன் மற்றும் முல்தானி மெட்டி
ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டி, பச்சைப்பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போலாக்கி ஃபேஸ் பேக்காக போட வேண்டும்.
Image credits: pinterest
Tamil
நன்மை
இந்த ஃபேஸ் பேக்கை சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும், சுருக்கங்கள் வருவதை தடுக்கும்.
Image credits: pinterest
Tamil
வறண்ட சருமம் உள்ளவர்களின் கவனத்திற்கு
உங்களது சருமம் வறண்டு இருந்தால் தேனை முகத்தில் தடவி நீண்ட நேரம் வைக்க வேண்டாம். நீங்கள் பச்சை பாலில் தேன் கலந்து தடவுவது நன்மை பயக்கும்.
Image credits: Pinterest
Tamil
எண்ணெய் சருமம் உள்ளவர்களின் கவனத்திற்கு
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் முல்தானி மிட்டி, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து போடுங்கள். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும்.