Beauty
உங்கள் முகம் வெள்ளையாகவும், ஜொலி ஜொலிக்கவும் செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்த வேண்டு என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
செம்பருத்தி பூவை நன்கு காய வைத்து பொடியாக எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
அரைத்து வைத்த செம்பருத்தியுடன் முல்தானி மெட்டி, தயிர் சேர்த்து முகத்தில் தடவவும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன் செய்வது நல்லது.
முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்க முகம் வெள்ளையாக மாற, செம்பருத்தி பொடியுடன் சர்க்கரை, கடலை மாவு மற்றும் பச்சை பால் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை பண்ண வேண்டும்.
செம்பருத்தி பூவை அரைத்து அதில் கற்றாழை ஜெல் சேர்ந்து முகத்தில் தடவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
அரைத்து வைத்த செம்பருத்தி பொடி உடன் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.