விலையுயர்ந்த க்ரீம்களில் ரசாயனங்கள் உள்ளன. அவை சருமத்தை பாதிக்கும். வீட்டு வைத்தியங்களில் ரசாயனங்கள் இல்லாததால் அவை சருமத்தை நன்றாக வைத்திருக்கும்.
முகத்திற்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தினால் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும், சுருக்கங்களை குறைக்கும். இதற்கு தினமும் முகத்தில் புதிய கற்றாழை ஜெல்லை தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. தேன் சருமத்தை மென்மையாக்கும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும். வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் குறையும்.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிதழும் பால் சேர்த்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும்.
சந்தனம் முகச்சுருக்கத்தை குறைக்கும், ரோஸ் வாட்டர் சருமத்தை குளிர்விக்கும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து ஃபேஸ் பேக்காக போடுங்கள்.
உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள போதுமான அளவு தண்ணீர் மற்றும் தூக்கம் அவசியம்.