நடிகை நயன்தாரா சந்தித்த டாப் 10 சர்ச்சைகளின் தொகுப்பு
Tamil
புகைப்படம் லீக்
நடிகை நயன்தாரா, சிம்புவை காதலித்தபோது அவர்கள் இருவரும் படுக்கையறையில் லிப்லாக் கிஸ் அடித்த புகைப்படம் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
Tamil
சினிமாவை விட்டு விலக முடிவு
பிரபுதேவாவை நடிகை நயன்தாரா காதலித்தபோது அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல் பரவியது.
Tamil
பிரபுதேவா மனைவி
தன் கணவரை அபகரித்துக்கொண்ட நயன்தாராவை எட்டி உதைப்பேன் என பிரபுதேவாவின் மனைவி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Tamil
வதந்தி
நயன்தாராவும் உதயநிதியும் தொடர்ந்து படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததால் அவர்களைப் பற்றியும் காதல் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
Tamil
ராதா ரவிக்கு பதிலடி
நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதா ரவி இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அதற்கு நயனும் பதிலடி கொடுத்தார்.
Tamil
ஆர்யாவுடன் திருமணம்
நயன்தாராவும், ஆர்யாவும் ராஜா ராணி படத்திற்காக திருமண கோலத்தில் எடுத்த புகைப்படம் வெளியாகி அவர்கள் உண்மையிலேயே கல்யாணம் செய்ததாக சர்ச்சை கிளம்பியது.
Tamil
ஆண்ட்டி சர்ச்சை
மாஸ் படத்தில் நடித்தபோது தன்னை ஆண்ட்டி என கூப்பிட்ட பிரேம்ஜியை, நடிகை நயன்தாரா எச்சரித்து இருந்தார்.
Tamil
தனுஷுடன் மோதல்
நானும் ரெளடி தான் படத்தின் பட்ஜெட் எகிறியதால் தனுஷ் அப்படத்தை பாதியில் நிறுத்த இருந்ததாகவும், பின்னர் நயன்தாரா தான் தன் சொந்த காசை போட்டு அப்படத்தை எடுத்ததாக கூறப்பட்டது.
Tamil
செருப்பால் வந்த வினை
நயன்தாராவுக்கு திருமணம் நடந்ததும் அவர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது, அங்கு கோவில் வளாகத்தில் செருப்பு அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கினார்.
Tamil
வாடகைத் தாய் மூலம் குழந்தை
நடிகை நயன்தாரா திருமணமான நான்கே மாதத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.