விஜய்யை மாஸ் ஹீரோவாக உயர்த்திய படம் கில்லி. தரணி இயக்கிய இப்படம் தான் விஜய்யின் முதல் 50 கோடி வசூல் அள்ளிய படம்
விஜய்யின் மாஸ் இமேஜை செதுக்கி பிரபுதேவா உருவாக்கிய படம் தான் போக்கிரி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார்.
விஜய்யின் கெரியரில் முதல் 100 கோடி வசூல் திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
கமர்ஷியலாக மட்டுமின்றி மக்களுக்கு நல்ல மெசேஜ் உள்ள படமாக வந்தது தான் கத்தி. இப்படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இன்று விஜய் ஒரு அரசியல்வாதியாக என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ, அதையெல்லாம் திரையில் பிரதீபலித்த படம் தான் சர்க்கார். இதையும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார்.
விஜய்யின் கெரியரில் 300 கோடி வசூல் செய்த முதல் படம் பிகில். அட்லீ இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
விஜய்யும் லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் மாஸ்டர். இப்படம் விஜய்யை புதிய பரிணாமத்தில் காட்டி வெற்றி கண்டது.
பேமிலி ஆடியன்ஸை கவர விஜய் நடித்த படம் வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.
விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது.
விஜய்யின் நடிப்புக்கு தீனி போட்ட படம் கோட். இதில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் மிரட்டி இருந்தார் தளபதி. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.