குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ஹன்சிகா, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு, கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி.
நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து கரம்பிடித்தார்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஹன்சிகா, மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட படங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார். வணிக ரீதியான படங்களில் ஹன்சிகா நடிப்பதில்லை.
சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, அடிக்கடி தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
நீலப் புடவையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஹன்சிகாவின் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் இந்தப் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு இன்னும் அழகாக இருக்கிறீர்கள், நிலவில் இருந்து இறங்கி வந்த தேவதை போல இருக்கிறீர்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சொந்தமாக தனி தீவு வைத்திருக்கும் நடிகை பற்றி தெரியுமா?
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை; அப்பா ஆனார் நாஞ்சில் விஜயன்!
Mothers Day Special: திருமணம் ஆகாமலே தாய் ஆன 7 நடிகைகள்
Thug Life : தக் லைஃப் ஆடியோ லாஞ்ச் திடீரென தள்ளிவைப்பு - காரணம் என்ன?