இலங்கையிலிருந்து வந்து இந்தியாவில் நிலையான இடத்தைப் பிடித்து, தொடர்ச்சியான வெற்றிப் படங்களைத் தந்தவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், வலம் வருகிறார்.
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பற்றி உங்களுக்கு ஒரு தகவல் தெரியுமா? அவர் தனது சொந்த நாடான இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஒரு தீவை வாங்கியுள்ளார்.
ஜாக்குலின் 2012 இல் அந்த நிலத்தை வாங்கினார். அங்கு ஒரு ஆடம்பர வில்லாவை கட்ட விரும்பினார்.
இந்த தீவை வாங்க ஜாக்குலின் சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் நிகர சொத்து மதிப்பு சுமார் 115 கோடி ரூபாய் ஆகும்.
திரை வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், பாலிவுட்டில் நிலைத்து நிற்க போராடி வருகிறார்.
தற்போது ஹவுஸ்ஃபுல் 5 மற்றும் வெல்கம் டு ஜங்கிள் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜாக்குலின்.
அக்ஷய் குமார், சல்மான் கான், வருண் தவான், இம்ரான் ஹஷ்மி மற்றும் நம்ம கிச்சா சுதீப் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார் ஜாக்குலின்.
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை; அப்பா ஆனார் நாஞ்சில் விஜயன்!
Mothers Day Special: திருமணம் ஆகாமலே தாய் ஆன 7 நடிகைகள்
Thug Life : தக் லைஃப் ஆடியோ லாஞ்ச் திடீரென தள்ளிவைப்பு - காரணம் என்ன?
நடிகை சாய் பல்லவி மேக்-அப் போடாமலேயே அழகாக ஜொலிப்பது எப்படி?