cinema

ஃபெமினா மிஸ் இந்தியா:

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் நடிகையும் - மாடலுமான சோபிதா துளிபாலா. இவர் 2013 ஆம் ஆண்டு, ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வாங்கியவர். 

பாலிவுட் அறிமுகம்:

பின்னர் இயக்குனர் அனுராக் காஷ்யாப் இயக்கிய ராமன் ராகவ் 2.0 படத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். முதல் பட வெற்றிக்கு பின்னர், செஃப் காலகாண்டி போன்ற படங்களில் நடித்தார்.

தென்னிந்திய மொழியில் என்ட்ரி:

ஹிந்தியைத் தொடர்ந்து, தெலுங்கில் கூடச்சாரி என்கிற படத்திலும், இதைத்தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

குரூப் சக்ஸஸ்:

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த குரூப் திரைப்படம் இவரை தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது.

பொன்னியின் செல்வன் வாய்ப்பு:

குரூப் படத்தின் மூலம் கிடைத்த பிரபலமே, சோபிதாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் நடிக்க காரணமாகவும் அமைந்தது.

வானதி:

பொன்னியின் செல்வன் படத்தில், வானதி கதாபாத்திரத்தில் அருண்மொழிவர்மனுக்கு ஜோடியாக சோபித்த துளிபாலா நடிப்பிலும், நடனத்திலும் ரசிகர்களை கவர்த்திழுத்தார்.

தற்போதைய பட வாய்ப்புகள்:

தற்போது தமிழ் பட வாய்ப்புகள் இவர் கைவசம் இல்லை என்றாலும், சித்தாரா என்கிற ஹிந்தி படத்திலும் மங்கி என்கிற ஆங்கில படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

காதல் சர்ச்சை:

தமிழில் பொன்னியின் செல்வன் ஒரே படத்தில் மட்டுமே இவர் நடித்துள்ள நிலையில், சமந்தாவின் முன்னாள் காதலர் கணவரான, நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

உறுதி செய்த போட்டோஸ்:

 இதனை உறுதி செய்யும் விதமாக, இருவரும் ஹோட்டலில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

கவர்ச்சிக்கு தடை போடாத சோபிதா:

சோபிதா  தற்போது கருப்பு நிற ஆடையில் கவர்ச்சி காட்டி கண்களுக்கு விருந்து வைத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாத் டவல்:

ஸ்ட்ராப் லெஸ் உடையில் சோபிதா இருப்பதை பார்த்து, ரசிகர்கள் சிலர் இது என்ன பாத் டவல் மாதிரி இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

லோ நெக் உடையில்... தங்க மங்கையாக மாறிய சிருஷ்டி! சிக்கென கொடுத்த போஸ்!

அடடா எவ்வளவு அழகு! நண்பர்களுடன் பர்த் டே கொண்டாடிய சமந்தா போட்டோஸ்!

பிறந்தநாளில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஷிவானி! வைரலாகும் போட்டோஸ்!

மெருகேறிய அழகில்... ஆளை மயக்கும் அதிதி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்..!