நடிகை நமீதா நேற்று, தன்னுடைய 42-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
cinema May 10 2023
Author: manimegalai a Image Credits:others
Tamil
பிறந்தநாள் அழைப்பு:
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அழைப்பிதழ் ஒன்று வெளியானது. பாஜக அரசியல் தலைவர்களான மோடி, அமித்ஷா முதல் அண்ணாமலை வரை அதில் இடம்பெற்றிருந்தனர்.
Image credits: others
Tamil
சிறப்பு பூஜை:
இந்த பத்திரிக்கையில் நமீதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவிலில் 108 தாமரை அபிஷேகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Image credits: others
Tamil
கோவிலில் குவிந்த ரசிகர்கள்:
நடிகை நமீதா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கோவிலுக்கு வருகிறார் என்கிற செய்தியை அறிந்து, ரசிகர்கள் பலர் கபாலீஸ்வரர் கோவிலில் குவிந்தனர்.
Image credits: others
Tamil
பாஜக தொண்டர்கள் வருகை:
அதே போல் தற்போது பாஜக கட்சியில் நமீதா இணைந்துள்ளதால், இவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சில பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Image credits: others
Tamil
கணவருடன் வந்த நமீதா:
தன்னுடைய கணவருடன் பட்டு புடவை அணிந்து கோவிலுக்கு வந்த நமீதா, சிறப்பு பூஜை செய்து... கடவுளை வழிபாடு செய்தார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டது.
Image credits: others
Tamil
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:
இதை தொடர்ந்து, நமீதா ரசிகர்களுக்கும், பாஜக சார்பில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
Image credits: others
Tamil
வைரல் போட்டோஸ்:
குடும்ப குத்துவிளக்காக அழகிய சேலையில், கோவிலுக்கு வந்து நமீதா பூஜை செய்து, பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Image credits: others
Tamil
சமூக வலைத்தளத்தில் குவிந்த வாழ்த்து:
நேற்று தன்னுடைய 42-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நமீதாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.