cinema

ஆண்ட்ரியா போட்டோஸ்:

நடிகை ஆண்ட்ரியாவின் பூட்டான் வெகேஷன் போட்டோஸை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாடகி

ஒரு பாடகியாக திரையுலகில் அறிமுகமாகி பின்னர், நடிகையாகவும் ஆனவர் ஆண்ட்ரியா.

முதல் பாடலே ஹிட்:

ஆண்ட்ரியா கடந்த 2005 ஆம் ஆண்டு அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடி அணைத்து ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்தார்.

நடிகையாக அறிமுகம்.

பாடகியாக அறிமுகமான அதே ஆண்டு 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. 

நெஞ்சில் பதிந்த பச்சைக்கிளி முத்துச்சரம்:

முதல் படத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஆண்ட்ரியா, சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்:

ஒரு பக்கம் பாடகியாக ஜொலித்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம்...  செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், போன்ற படங்களில் நடித்தார்.

எதிர்பார்க்கும் படம்:

ஆண்ட்ரியா தற்போது சுமார் அரை டஜன் படங்களில் நடித்து வந்தாலும், மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள பிசாசு படத்தை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
 

சர்ச்சை:

ஆண்ட்ரியா எந்த அளவிற்கு பிரபலமோ அதே போல் சர்ச்சைக்கும் பெயர் போனவர்.

இத்தனை பேருடன் காதல்?

தனுஷ், அனிரூத் உள்ளிட்ட சிலரின் காதல் கிசுகிசுவில் சிக்கி... மன உளைச்சலால் சில காலம் திரையுலகில் இருந்தே விலகி இருந்தார்.

அடிக்கடி சுற்றுலா:

ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர் தற்போது பூட்டன் சென்றுள்ளார்.

கலக்கல் போட்டோஸ்:

அங்கு நிறைந்திருக்கும் இயற்க்கை அழகுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாறை மேல் கோவில்:

குறிப்பாக பாறை மேல் இருக்கும் கோவிலை படம்பிடித்து வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

கியூட் மெசேஜ்:

இந்த புகைப்படங்களை வெளியிட்டதோடு, இது போன்ற இமையமலை பகுதிக்கு செல்வதால் தூய்மையான காற்று, ஆரோக்கியம், ஆன்மீக உணர்வு கிடைப்பதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் லாஞ்ச் Exclusive போட்டோஸ் இதோ

வயல் வெளியில்.. கண்ணாடி முன் பிரியங்கா மோகன்! வித்யாசமான போட்டோ ஷூட் !

கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ஷிவானியின் ஹாட் கிளிக்ஸ்

கையில் வாளுடன் ‘மாடர்ன்’ ஆதித்த கரிகாலனாக மாறி மாஸ் காட்டிய விக்ரம்