கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடைய தந்தை சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர் ஆவார்.
சினிமா பின்னணியை கொண்ட குடும்பம் என்பதால், கீர்த்தி சுரேஷுக்கு சினிமா மீது சிறு வயதிலேயே ஈர்ப்பு வந்தது.
இதை தொடர்ந்து, மோகன் லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கீதாஞ்சலி இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. அதே போல் அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார்.
தமிழில் இவரை இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஏ.எல்.விஜய் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் இதை தொடர்ந்து வெளியான, ரஜினி முருகன் மூலம் சூப்பர் ஹிட் பட நாயகியாக மாறினார்.
மிக குறுகிய காலத்தில், விஜய், தனுஷ், சூர்யா உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார்.
தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தெலுங்கில் இவர் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக நடித்த, மகாநடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்திய மொழியை தொடர்ந்து கடந்த ஆண்டு அட்லீ தயாரிப்பில் வெளியான பேபி ஜான் படத்திலும் நடித்திருந்தார்.
அதே போல் கடந்த ஆண்டு டிசம்பரில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார்.
இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. அதில் தமிழ் பெண்ணாக இவர் கொண்டாடிய மருதாணி கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
காதில் மணமகள் என கம்மல் போட்டு, அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்த போட்டோசை கீர்த்தி வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.