கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனலிசாவுக்கு தேடிவந்த பாலிவுட் அறிமுகம்
cinema Jan 30 2025
Author: Ganesh A Image Credits:Instagram/monalisa
Tamil
நடிகையான மோனலிசா
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா, இப்போது பாலிவுட்டில் நுழைய உள்ளார். அவரது முதல் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறும்.
Tamil
இயக்குனர் மோனலிசாவின் வீட்டிற்கு வருகை
இயக்குனர் சனத் மிஸ்ரா மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோனலிசாவின் வீட்டிற்கு வருகை தந்து, தனது 'Diary of Manipur' படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க சம்மதம் வாங்கினார்.
Tamil
மோனலிசா வைரலானது எப்படி?
சனத் மிஸ்ரா, சமூக ஊடகங்களில் மோனலிசாவின் வைரல் வீடியோவைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, தனது படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்ததாகக் கூறுகிறார்.
Tamil
மோனலிசாவின் வாழ்க்கையை மாற்றிய கும்பமேளா
கும்பமேளா வீடியோ மோனலிசாவின் வாழ்க்கையை மாற்றியதாக இயக்குனர் கூறினார். அவரது திறமையைப் பார்த்து படத்தில் நடிக்க வாய்ப்பு தந்துள்ளதாக தெரிவித்தார்..
Tamil
ஹீரோ யார்?
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ், 'Diary of Manipur' படத்தில் முன்னணி வேடத்தில் நடிப்பார் என்று சனத் மிஸ்ரா கூறினார். படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது.
Tamil
லண்டனில் ஷுட்டிங்
படப்பிடிப்புக்கு முன்பு மோனலிசா மும்பையில் மூன்று மாத பயிற்சி பெற உள்ளாராம். படத்தின் பெரும்பகுதி லண்டனில் படமாக்கப்படும்.
Tamil
மோனலிசாவைப் பாராட்டும் பாலிவுட் பிரபலங்கள்
படத்தில் மோனலிசா ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக நடிக்க உள்ளாராம். பல பாலிவுட் பிரபலங்கள் அவரது திறமையை அங்கீகரித்துள்ளனர்.