cinema
குட்டி ராதிகா என தமிழில் பிரபலமான இவர் கன்னடப் பட நடிகை ஆவார். தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் பல வருடங்கள் ரசிகர்களை வசீகரித்தார்.
2002 ஆம் ஆண்டு வெளியான 'நினாகாகி' என்ற கன்னடப் படத்தின் மூலம் ராதிகா அறிமுகமானார். இதில் விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக நடித்தார்.
கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்தார். தமிழில் இவர் நடித்த இயற்க்கை திரைப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ரத்தன் குமார் என்பவரை ராதிகா திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரத்தன் இறந்தார்.
இந்நிலையில் திரையுலகில் கவனம் செலுத்திய போது தான், அரசியல் தலைவர் குமாரசாமியுடன், காதல் காரணமாக அதிகம் பேசப்படும் நடிகையாக மாறினார்.
குமாரசாமியை ரகசிய திருமணம் செய்து கொண்டு, பல வருடங்களுக்கு பின்னரே இந்த தகவலை குழந்தையோடு வந்து அறிவித்தார்.
2007 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடாவின் மகன் எச்.டி. குமாரசாமியை ராதிகா இரண்டாவதாகத் திருமணம் செய்த நிலையில் 2015-ல் அவரிடம் இருந்தும் பிரிந்தார்.
இதன் பின்னர் ராதிகா கடைசியாக நடித்த படம் 'பைரவி தேவி'. அவரது சொந்த தயாரிப்பில் உருவான இந்த பாம் supernatural திரில்லர் படம் கடந்த ஆண்டு வெளியானது.
தற்போது மகளுடன் தனிமையில் வாழ்த்த வரும் ராதிகா, தன்னுடைய மகள் ஷமிதா பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.