cinema
ரகுல் ப்ரீத் சிங்கும் ஜாக்கி பக்னானியும் பிப்ரவரி 21, 2024 அன்று கோவாவில் ஆனந்த் கராஜ் மற்றும் சிந்தி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இது இந்த ஜோடியின் முதல் காதலர் தினம்.
புல்கித் சாம்ராட்டும் கிருத்தி கர்பந்தாவும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஆண்டு இந்த ஜோடி திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
தாப்சி பன்னு டென்னிஸ் வீரர் மத்தியாஸ் போவை மார்ச் மாதம் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி திருமணத்திற்கு பின் முதல் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள் .
சோனாக்ஷி சின்ஹா ஜூன் 23, 2024 அன்று மும்பையில் ஜாகிர் இக்பாலை பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த ஜோடி முதல் முறையாக காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது.
அதிதி ராவ் - சித்தார்த். செப்டம்பர் மாதம் தெலங்கானாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இது இந்த ஜோடியின் முதல் காதலர் தினம்.
நாக சைதன்யாவும், ஷோபிதா துலிபாலாவும் டிசம்பர் 4, 2024 அன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஆண்டு திருமணத்திற்கு பின்னர் தங்களின் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.