cinema

சர்ச்சைக்குரிய 15 இந்திய படங்கள்

'எமர்ஜென்சி':

கங்கனா ரணாவத் இந்திரா காந்தி வேடத்தில் நடித்த 'எமர்ஜென்சி' படம் சீக்கிய வரலாற்றைத் திரித்து, தவறாக சித்தரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்ந்து இந்த படம் வெளியிடப்படாமல் உள்ளது.

ஃபயர்:

தீபா மேத்தா இயக்கிய இந்தப் படம் லெஸ்பியன் உறவைப் பற்றியது. ஷபானா மற்றும் நந்திதா தாஸ் இடையே ஒரு பாலியல் காட்சி உள்ளதால் இப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை. 

காமசூத்ரா: ஒரு காதல் கதை (1996)

காமம் மற்றும் பாலியலை மைய கருவாக வைத்து, இந்த படம் இந்தியாவில் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மீரா நாயர் இயக்கிய இந்த படம் பிரைம் வீடியோவில் உள்ளது.

உர்ஃப் பேராசிரியர்:

பங்கஜ் கபூர் இயக்கிய இந்தப் படம் ஆபாச வசனங்கள் காரணமாக திரையரங்குகளில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது.

தி பிங்க் மிரர்:

ஸ்ரீதர் ரங்காயன் இயக்கிய இந்தப் படம், ஆபாசமான மற்றும் சில ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகளால் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருப்பினும், இதை பிரைம் வீடியோவில் காணலாம்.

பஞ்ச்:

அனுராக் காஷ்யப் இயக்கிய இந்தப் படத்தில் வன்முறை மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோக காட்சிகள் அதிகம்  இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக CBFC இதை தடை செய்தது.

காண்டு:

கௌசிக் முகர்ஜி இயக்கிய வங்காளப் படம் இது. பாலியல், போதைப்பொருள் மற்றும் நிர்வாண காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் இப்படம் தடைசெய்யப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் ஃபுட்பால்:

இந்த படம் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் மற்றும் அவரது தீவிரவாத தந்தையைப் பற்றியது. உணர்திறன் மிக்க விஷயத்தைக் காரணம் காட்டி தணிக்கை வாரியம் இந்தப் படத்தை தடை செய்தது.

டேஸ்டு இன் டூன்:

அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படம்,  சிறுவனைப் பற்றியது.ஒரு சிறுவனை பற்றியது. சில ஏற்றுக்கொள்ளமுடியாத காட்சிகளால் இப்படம் தடை செய்யப்பட்டது.

அன்ஃப்ரீடம்:

ராஜ் அமித் குமார் இயக்கிய இந்தப் படம் ஓரினச் சேர்க்கையைப் பற்றியது.  சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் மற்றும் துணிச்சலான காட்சிகள் காரணமாக இது வெளியிடப்படவில்லை.

ஆந்தி:

குல்சார் இயக்கிய இந்தப் படம் இந்திரா காந்தியால் ஈர்க்கப்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் தடைசெய்யப்பட்டது.

கிஸ்ஸா குர்சி கா:

அம்ரித் நஹாட்டா இயக்கிய இந்தப் படம் இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தியை சுட்டிக்காட்டுவது போல் இருந்ததால் இந்திரா அரசு தடை விதித்து.

சத்ரக்:

விமுக்தி ஜெயசுந்தர இயக்கிய இந்தப் படத்தில், பாலி டேம் முழு நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார். தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்கு தடை விதித்தது.

ஹவா அனே தே:

பார்த்தோ சென் குப்தா இயக்கிய இந்த படத்தில், தணிக்கை வாரியம் கூறிய காட்சி நீக்கப்படாததால், படம் தடை செய்யப்பட்டது.
 

தி பெயின்டட் ஹவுஸ்:

சந்தோஷ் பாபுசேனன்- சதீஷ் பாபுசேனன் இயக்கிய இப்படத்தில்,  ஒரு வயதான ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான உச்சபச்ச காதல் காட்சிகளால் இப்படம் தடை செய்யப்பட்டது.

லவ்:

சுதான்சு சரியா இயக்கிய இந்தப் படம் ஓரினச் சேர்க்கையைப் பற்றியது. இதில் பல பாலியல் காட்சிகள் உள்ளன. தணிக்கை வாரியம் இதை வெளியிட அனுமதிக்கவில்லை.

Find Next One