business

இஷா அம்பானி - ஆனந்த் பிரமல்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் திருமணத்திற்கு ரூ. 742 கோடி செலவானது. இத்தாலி, உதய்பூர், மும்பை ஆகிய பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. 

Image credits: google

சுப்ரோதோ ராய் வீட்டு திருமணம்

சஹாரா தலைவர் சுப்ரோதோ ராயின் மகன்கள் சுஷாந்தி ராய் மற்றும் சீமான்டோ ராய் இருவரும் ஒன்றாக திருமணம் செய்து கொண்டனர். 2004ல் நடந்த இந்த திருமணத்திற்கு 556 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

Image credits: mensxp.com

ராஜீவ் ரெட்டி - பிராமணி

சுரங்க தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஜனார்த்தன் ரெட்டி மகன் ராஜீவ் ரெட்டி, பிராமணி ஆகியோருக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 2016இல் திருமணம் நடந்தது. இதன் செலவு ரூ.549 கோடி. 

Image credits: rvrpro

குல்ராஜ் பெஹல் - சிருஷ்டி மிட்டல்

ஸ்டீல் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மருமகள் சிருஷ்டி, குல்ராஜ் பெஹல் ஆகியோர் 2013 ஆம் ஆண்டு ஸ்பெயினில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சுமார் 519 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 

Image credits: google

வனிஷா மிட்டல் - அமித் பாட்டியா

ஸ்டீர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல், டெல்லியை சேர்ந்த அமித் பாட்டியாவை 2004 இல் மணந்தார். இந்த திருமணத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

Image credits: nbc

லலித் தன்வர்- யோகிதா ஜான்பூரியா

மூத்த காங்கிரஸ் தலைவர் கன்வர் தவரின் மகன் லலித் தார், யோகிதா ஜான்பூரியாவை 2011ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சுமார் 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

Image credits: newsdailymail

அடில் சஜன்- சனா கான்

இயக்குனர் அடில் சஜன், சனா கானை ஆடம்பர பயணத்தில் திருமணம் செய்து கொண்டார். 4 நாட்கள் நடந்த இந்த திருமணத்தில் சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 

Image credits: weddingsutra

சஞ்சய் ஹிந்துஜா - அனு மஹ்தானி

பிரிட்டனின் பணக்கார குடும்பங்களில் ஒருவரான சஞ்சய் ஹிந்துஜா, வடிவமைப்பாளர் அனு மஹ்தானியை உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்காக சுமார் 140 கோடி ரூபாய். 

Image credits: yahoo

உலகின் மிக விலையுயர்ந்த 10 வீடுகள் - டாப் லெவலுக்கு வந்த அம்பானி வீடு!

அடேங்கப்பா!! அம்பானி வீட்டு பணியாளர்களுக்கு இத்தனை லட்சமா சம்பளம்?

பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்!!

தங்கம் ஏன் விலை ஏறுகிறது தெரியுமா ?