business
வருமானத்தில் முதல் செலவு சேமிப்புக்காக தான் இருக்க வேண்டும். ஏனென்றால் கல்வி, மருத்துவ செலவு உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளுக்கு பணமே பிரதானம்.
சேமிப்பை பெருக்க அநாவசிய செலவுகளை குறைக்க வேண்டும்.
எப்போதும் அதிகபட்சமாக வருமானத்தை ஈட்ட இலக்கை முடிவு செய்யுங்கள். இதன் மூலம் உங்களது வருமானத்தை மிகக் குறுகிய காலத்தில் உயர்த்த முடியும்.
வரவு, செலவுத் திட்டத்தை முறையாக திட்டமிடுவதன் மூலம், நாம் எவ்வளவு செலவழிக்க வேண்டும் எவ்வளவு சேமிப்பு என்பதை திட்டவட்டமாக அறிய முடியும்.
எதற்காக செலவு செய்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில் இருக்கும் ஒரு பொருளை ஆபர் போன்ற காரணங்களுக்காக அவசியமில்லாமல் வாங்காதீர்.
மலிவான விலையில் பொருள்களை வாங்காதீர்கள். இதனால் மீண்டும் மீண்டும் ஒரே பொருளுக்கு செலவு செய்ய நேரிடும்.
தேவையான பொருட்களை முதலில் வாங்கவேண்டும். இதன் மூலம் கூடுதல் செலவுகளை குறைக்க முடியும்.
தங்கம், நிலம் ஆகியவை வாங்கி சொத்துகளில் முதலீடு செய்யலாம். FD போன்றவற்றில் முதலீடு செய்தால் அதிக வட்டியை பெறலாம். முதலீட்டை கற்று கொள்ளுங்கள்.
உங்கள் முழுநேர வேலைக்கு பின், பார்ட் டைம் வேலையும் சேர்த்தே செய்யுங்கள். அந்த வேலையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.
சேமிப்புடன் சேர்த்து, அவசர நிதியையும் மற்றொரு புறம் தயார் செய்யுங்கள். இதன் மூலம், திடீர் செலவுகளுக்கு கடன் வாங்க தேவையில்லை.