ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் ஒன்று பாதுகாவலரின் கை விரலை கடித்து துண்டாக்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் ஒன்று பாதுகாவலரின் கை விரலை கடித்து துண்டாக்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் ஒரு வனவிலங்கு உயிரியல் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்தத உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்தின் அருகே சுமார் 15க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சிங்கத்தின் கூண்டை சுற்றி நின்று கொண்டிருந்தனர். அப்போது, பார்வையாளர்கள் முன்பு கெத்து காட்ட நினைத்த பாதுகாவலர் கூண்டில் இருந்த சிங்கத்தை சீண்டியது பதிவாகி இருந்தது.
Show off bring disgrace
The lion at Jamaica Zoo ripped his finger off. pic.twitter.com/Ae2FRQHunk
சிங்கத்தின் முகத்தை கைகளால் வருடிய பாதுகாவலர். கை விரலை சிங்கத்தின் வாய்க்குள் விட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த சிங்கம் பாதுகாவலரின் கைவிரலை பிடித்து இழுத்தது. இதில், அவரது விரல் துண்டானதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.