சவுதி அரேபியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து சவுதி அரேபியா பிறப்பித்து இருக்கும் உத்தரவில், இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், அர்மெனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளுக்கு சவுதி அரேபியாவில் இருந்து பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
தயார் நிலை:
சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், சவுதி அரேபியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிந்து, அதற்கு முறையான சிகிச்சை அளிக்கும் வசதிகள் சவுதி அரேபியாவில் உள்ளது என அந்நாட்டு நோய் தடுப்பு துறைக்கான துணை அமைச்சர் அப்துல்லா அசிரி தெரிவித்து இருக்கிறார்.
“இதுவரை மனிதர்களிடையேயான பாதிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு உள்ள நாடுகளிலும், இது அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.
குரங்கு அம்மை பாதிப்பு:
இதுவரை உலகளவில் 11 நாடுகளை சேர்ந்த 80 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த நோய் பாதிப்பு குறித்த விவரங்களை முடிந்த வரை சேகரிப்பதற்கான பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.
விலங்குகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் காரணமாக மனிதர்களிடையே சில பயணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட துவங்கி இருக்கிறது என உலக சுகாதார மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.