monkeypox: மங்கிஃபாக்ஸால் 11 நாடுகளில் 80 பேர் பாதிப்பு: தொற்று மேலும் அதிகரிக்கும்: WHO எச்சரிக்கை

By Pothy Raj  |  First Published May 21, 2022, 3:59 PM IST

monkeypox :கொரோனா வைரஸுக்குப்பின் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மங்கிஃபாக்ஸ் வைரஸால் இதுவரை 11 நாடுகளில் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸுக்குப்பின் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மங்கிஃபாக்ஸ் வைரஸால் இதுவரை 11 நாடுகளில் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

Tap to resize

Latest Videos

விலங்குகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் வைரஸ் கடைசிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் உள்ளூர் மக்கள், அடிக்கடி பயனங்கள் மேற்கொள்பவர்கள் மீது இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இந்த வைரஸ் பற்றஇ அறிந்து கொள்ள உலக சுகாதார அமைப்பும், மற்ற கூட்டு நிறுவனங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். எவ்வாறு இந்த வைரஸ் பரவுகிறது, காரணம் என்று மங்கிஃபாக்ஸ் வைரஸ் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்.

இதுவரை மங்கிஃபாக்ஸ் வைரஸால் 11 நாடுகளில் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று மேலும் அதிகரி்க்கும் என்று நம்புகிறோம். அறிகுறிகள் உள்ள 50 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. ஆதலால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். 

வைரஸ் முடிவுக்கு வரும் நாடுகளில் இருந்து மங்கிஃபாக்ஸ் வைரஸ் குறித்த தகவல்களை தொடர்ந்து பெற்று வருகிறோம். கோவிட்-19 வைரஸிருந்து முற்றிலும் மாறுபட்டது மங்கிஃபாக்ஸ் வைரஸ். அது பரவும் விதமும் வேறுபட்டது. மங்கிஃபாக்ஸ் குறித்த விவரங்களை நம்பகத்தன்மையான அமைப்புகளிடம் இருந்து பெற்று, அதாவது தேசிய சுகாதார அமைப்புகளிடம் இருந்து பெற்று மக்களிடம் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளது

மங்கிஃபாக்ஸ் வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களக்குப் பரவும் ஒரு வகை வைரஸாகும். சின்னம்மை போன்ற பாதிப்பை மனிதர்களுக்கு ஏற்படுத்தும். மருத்துவரீதியாகப் பார்த்தால் இந்த மங்கிஃபாக்ஸால் பெரிதாக பாதிப்பு ஏற்படாது, அச்சப்படவேண்டியதில்லை.

இந்த மங்கிஃபாக்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சின்னம்மை வருவதுபோன்று உடலில் சிறிய அளவிலான கொப்புளங்கள், கடும் காய்ச்சல், அரிப்பு, கைகால் வீக்கம் போன்றவை ஏற்படும். அரிதாகவே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமம் பார்க்கலாம். 2 வாரங்கள் முதல் 4 வாரங்களுக்குள் நோய் நீங்கிவிடும்.

மங்கிஃபாக்ஸ் வைரஸ் குறித்து இந்திய நோய்கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்த அறிகுறிகளுடன் வருவோரின் உடலிலில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள், புனேயில் உள்ள வைரலாஜி ஆய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
 

click me!