கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பீஜிங் நகரில் உணவகங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
பீஜிங் நகரில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட ஆயிரக் கணக்கானோர் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் நகரில் ஏற்பட்டதை போன்றே பீஜிங்கிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா வழிகாட்டு கட்டுப்பாடுகளை கடுமையாக்க பீஜிங் முடிவு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் இதுவரை இல்லாத அளவு மிக மோசமான பாதிப்பை பீஜிங் எதிர்கொண்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 1,300 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பீஜிங் நகரில் உணவகங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
undefined
பலத்த கட்டுப்பாடுகள்:
கொரோனா தொற்றாளர்களே இல்லை என்ற நிலையை அடைய சீனா மிகக் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள், நீண்ட தனிமைப்படுத்தல், பெரும்பாலானோருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கடுமையான ஊரடங்கு விதிமுறை உள்ளிட்டவைகளை பின்பற்றி வருகிறது.
பீஜிங்கில் உள்ள நன்சியுவான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்களில் 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சுமார் 13 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தல் ஓட்டல்களுக்கு சீனா தங்க வைத்துள்ளது. இதே தகவலை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் அரசு நோட்டீஸ் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
சட்ட நடவடிக்கை:
“மே 21 ஆம் தேதி நள்ளிரவு துவங்கி ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் நன்சியுவான் குடியிருப்பு வாசிகளை ஈடுபடுத்த வல்லுநர்கள் பரிந்துரை வழங்கி உள்ளனர். தயவு செய்து ஒத்துழைப்பு வழங்குங்கள். இல்லை எனில் அதன் பின் வரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்,” என சாயோங் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
குடியிருப்பின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களில் ஏற மக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் வரிசை கட்டி நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
“நாங்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறோம். எங்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என்றே பரிசோதனையில் தெரியவந்துள்ளது. என் வீட்டின் அருகில் இருப்பவர்களில் பெரும்பலானோர் இளம் வயதுடையவர்கள், அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இங்கு நடப்பவைகளை பார்க்கும் போது போர்க்களத்தில் இருப்பதை போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது,” என குடியிருப்பில் வசிக்கும் நபர் தனது வெய்போவில் தெரிவித்து உள்ளார்.