எங்களை கட்டாயப்படுத்துறாங்க.. தாலிபான் புது உத்தரவால் சிக்கித் தவிக்கும் பெண் செய்தியாளர்கள்..!

By Kevin Kaarki  |  First Published May 22, 2022, 2:36 PM IST

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தாலிபான்கள் ஆப்கனில் ஏராளமான கட்டுப்பாடுகளை  விதித்து வருகின்றனர். 


ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னணி செய்தி தொலைகாட்சிகளில் பெண் செய்தியாளர்கள் தங்கள் முகத்தை மறைத்தப்படி செய்தி வழங்கிய  சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்களை முழுமையாத மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற தாலிபான்களின் உத்தரவை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தாலிபான்கள் ஆப்கனில் ஏராளமான கட்டுப்பாடுகளை  விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் இஸ்லாம் மத கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதில் தாலிபான்கள் மிக கடுமையாக உள்ளனர். 

Latest Videos

undefined

கட்டுப்பாடுகள்:

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ஆப்கானிஸ்தான் தலைவர் ஹிபாதுல்லா அகுன்சதா பெண்கள் பொது இடங்களில் தவறாமல் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து தாலிபான் அரசின் நல்லொழுக்கங்கள் துறை செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜர் செய்தி வாசிப்பாளர்கள் டி.வி.யில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், பெண் செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் முகத்தை மறைக்காமலேயே செய்தி வாசித்தனர். டோலோநியூஸ், அரியானா டெலிவிஷன், ஷாம்ஷத் டி.வி. மற்றும் 1 டி.வி. போன்ற முன்னணி சேனல்கள் அதிகாலை செய்தி தொகுப்புகளில் பெண்கள் தங்களின் கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி முழுமையாக பர்தா அணிந்து கொண்டு செய்தி வாசித்தனர். 

எதிர்ப்பு:

“நாங்கள் முகக்கவசம் அணிய மறுத்தோம். ஆனால் டோலோநியூஸ்-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகம் தெரிய திரையில் வரும் பட்சத்தில் அவர்களுக்கு வேறு பணி வழங்கப்படும் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுத்தது. டோலோநியூஸ்-ஐ வற்புறுத்தினர், நாங்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டோம்,” என டோலோநியூஸ் பெண் செய்தி வாசிப்பாளர் தெரிவித்து இருக்கிறார். 

விதிமுறைகள்:

மே 7 ஆம் தேதி வாக்கில் தாலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “பெண்கள் பொது இடங்களில் வெளியே வரும் போது தலை முதல் கால் வரை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வகையில் பர்தா அணிந்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாமல் இருந்தால் உடனடி பணிநீக்கம் செய்யப்படுவர். இதோடு அரசு பணிகளில் உள்ள ஆண்களின் மனைவி அல்லது மகள் பர்தா அணியாமல் இருந்தார், அவர்கள் மீதும் பணி நீக்கம் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

click me!