ரஷ்யா-உக்ரைன் போர் (Russia Ukraine War) நடந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ளார். அமெரிக்காவின் இராணுவ உதவியை உக்ரைன் கடனாக ஒருபோதும் ஏற்காது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
Zelensky says Ukraine does not consider US military aid a loan: அமெரிக்க அதிபர் பதவியேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அவரது நிர்வாகம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறது. இருப்பினும், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே நடந்த கடுமையான பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.
டிரம்புக்கு ஜெல்ன்ஸ்கி பதிலடி
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் இப்போது தனது அணுகுமுறையை மாற்றியுள்ளது. அமெரிக்கா-ரஷ்யா நெருக்கத்தை கருத்தில் கொண்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திட்டவட்டமான பதிலை அளித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட இராணுவ உதவியை உக்ரைன் எந்த வகையிலும் கடனாகக் கருதாது என்று ஜெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அணு உலை ஒப்புதல்: இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்!
உக்ரைன் அமெரிக்காவின் இராணுவ உதவியை கடனாகக் கருதாது
இது தொடர்பாக ஜெலென்ஸ்கி ஒரு நேர்காணலில் கூறுகையில், ''உக்ரைன் அமெரிக்காவின் ராணுவ உதவியை கடனாக ஒருபோதும் ஏற்காது. நாங்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுகிறோம், இந்த ஆதரவு உக்ரைனுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் ஸ்திரத்தன்மைக்கும் தான். அமெரிக்கா செய்த உதவி கடனில்லை, அந்த பணத்தை திருப்பி கொடுக்க மாட்டோம். இந்த பணத்தை டிரம்ப் மறந்து விட வேண்டியது தான்'' என்றார்.
அமெரிக்காவில் இந்தியர்களின் சட்டவிரோத நுழைவு: 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு