தனிமையில் இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கொள்ளையன்... ஒரே நொடியில் காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!

By vinoth kumar  |  First Published Feb 8, 2020, 3:55 PM IST

வுகான் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஜிங்ஷான் நகரம். இங்கு கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, கொள்யைடிப்பதற்காக வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்துள்ளார். ஆனால், அந்த பெண் தனிமையில் இருப்பதை அறிந்து கொள்ளையடிப்பதை கைவிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெண் கூச்சலிட்ட முயற்சி செய்த போது கழுத்தை நெரித்தும், வாயை மூடியும் வெறிக்கொண்டு பலாத்காரம் செய்ய முயன்றார்.


கொரோனா வைரஸ் பீதியால் நிலைகுலைந்து போயிலுள்ள சீனாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இநத் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 34,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுறது. உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முழுவதும் பீதி அடைந்துள்ளனர். 

Latest Videos

இந்நிலையில், வுகான் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஜிங்ஷான் நகரம். இங்கு கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, கொள்யைடிப்பதற்காக வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்துள்ளார். ஆனால், அந்த பெண் தனிமையில் இருப்பதை அறிந்து கொள்ளையடிப்பதை கைவிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெண் கூச்சலிட்ட முயற்சி செய்த போது கழுத்தை நெரித்தும், வாயை மூடியும் வெறிக்கொண்டு பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் நான் வுகான் நகரில் இருந்து வந்திருப்பதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தன்னை தனிமையில் மருத்துவர்கள் வைத்திருப்பதாக கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். இதனையடுத்து, அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!