நீங்கள் இஸ்ரேலில் மிகப் பிரபலம்.. எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள்.. பிரதமர் மோடியை அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

By Asianet Tamil  |  First Published Nov 2, 2021, 10:41 PM IST

இந்த மாநாட்டில் 120 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகத் தலைவர்கள் இத்தனை பேர் ஒரே இடத்தில் குவிந்திருப்பது இந்த மாநாட்டில் பங்கேற்கத்தான். 


பிரதமர் நரேந்திர மோடியை தன்னுடைய கட்சியில் இணையும்படி இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 120 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகத் தலைவர்கள் இத்தனை பேர் ஒரே இடத்தில் குவிந்திருப்பது இந்த மாநாட்டில் பங்கேற்கத்தான்.  இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காலநிலை மாற்றம் தொடர்பாக உரை நிகழ்த்தினார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு வந்துள்ள தலைவர்கள், தனித்தனியாக இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேசி வருகிறார்கள். பிரதமர் மோடியும் பல நாட்டுத் தலைவர்களைத் தனியாக சந்தித்து பேசினார். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுக் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.  இச்சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்,   “நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்... வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்” என்று நகைச்சுவையாக அழைப்பு விடுதார். 

இதனால் அந்த கூட்ட அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இஸ்ரேல் பிரதமராக நப்தலி பென்னெட் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிகழ்வது இதுவே முதல்முறையாகும்.

click me!