ஹலோ… மார்க்கா…? இது எங்க லோகோ.. பேஸ்புக் தலையில் இடியை இறக்கிய நிறுவனம்….

By manimegalai aFirst Published Nov 2, 2021, 6:38 PM IST
Highlights

மெட்டா நிறுவனத்தின் புதிய லோகோ காப்பி என்றும், அது வேறு ஒரு நிறுவனத்தினுடையது என்றும் தகவல்கள் உலா வர ஆரம்பித்து உள்ளன.

மெட்டா நிறுவனத்தின் புதிய லோகோ காப்பி என்றும், அது வேறு ஒரு நிறுவனத்தினுடையது என்றும் தகவல்கள் உலா வர ஆரம்பித்து உள்ளன.

இப்போது நம் வாழும் வாழ்க்கை இணையத்தை ஒட்டியே வாழும் வாழ்க்கை. சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இருந்துவிடலாம்… ஆனால் இன்டெர்நெட்டும், சமூக வலைதளங்களும் இல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டம் மற்றும் கட்டாயம் வந்துவிட்டது.

நமது அன்றாட பணிகளில் கிட்டத்தட்ட 80 சதவீதமான நேரத்தை சமூக வலை தளங்கள் முழுங்கி விடுகின்றன. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என சதா சர்வ நேரமும் இளைய சமுதாயத்தில் மூழ்கி திளைக்கிறது.

அதிலும் முன்னணி நிறுவனமான பேஸ்புக்கை மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 300 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமூக பிரச்னைகளை அலசும் மையமாகவும் பேஸ்புக்கின் பயன்பாடு இருந்து வருகிறது.

அதே நேரத்தில் பேஸ்புக்குக்கு வேறு ஒரு பிரச்னை எழுந்தது. பேஸ்புக் பகிரப்படும் தகவல்கள் திருடப்படுகின்றன, அதுவும் எளிய வழியில் திருடப்படுகின்றன, மிக எளிதாக ஹேக்கர்கள் உள்ளே நுழையும் வகையில் இருக்கிறது  என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பேஸ்புககின் நம்பக்தன்மையை அசைத்து பார்க்க விறுவிறுவென களத்தில் இறங்கினார் மார்க் ஜூக்கர்பர்க். தொடர் சர்ச்சைகளில் இருந்து விலக தமது நிறுவனத்தை பெயரை மாற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.

இனி புதிய நிறுவனத்தின் பெயர் மெட்டா என்று அறிவித்து அதற்கு ஒரு லோகோவையும் வெளியிட்டார். இனி எதிர்காலத்தை மையப்படுத்தியே தமது நிறுவனத்தின் பிராண்டுகள் இருக்கும். எவ்வளவோ பிரச்னைகளை பார்த்துவிட்டோம். போராட்டங்களை எல்லாம் எதிர் கொண்டுவிட்டோம் என்று மாஸாக அறிவித்தார்.

பெயர் மட்டும் தான் மாற்றம், ஆனால் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் அதே பெயரில் தான் இருக்கும் என்று மார்க் கூறினார். பேஸ்புக் நிறுவனத்தின் இந்த மாற்றம் உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளானது.

பல்வேறு விதமான கருத்துகள் அள்ளி தெளிக்கப்பட்டன. பாசிட்டிவ்வான, நெகட்டிவ்வான என வகை, தொகை இல்லாமல் கருத்துகள் வந்து குவிந்தன. இப்போது மார்க் ஜூக்கர்பெர்குக்கு வேறு ஒரு பிரச்னை முளைத்துள்ளது.

மார்க் அறிவித்துள்ள லோகோ அவரது சொந்த டிசைன் கிடையாதாம். காப்பி அடிக்கப்பட்டதாம்.

அதாவது நமது மொழியில் சொல்வது என்றால் ஈ அடிச்சான் காப்பி என்று கூறுவோமே அப்படித்தான் இருக்கிறது. மெட்டா லோகோவை பல ஆண்டுகளாகவே பெர்லினை சேர்ந்த ஒரு நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

அந்த பெர்லின் நிறுவனத்தின் பெயர் M sense migrane என்பாகும். 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இது குறித்து பெர்லின் நிறுவனம் கூறியிருக்கும் விஷயம் தான் மிக முக்கியமானது.

அந்நிறுவனம் தமது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் இவ்வாறு கூறி இருக்கிறது. எங்களின் லோகோ பேஸ்புக்கை கவர்ந்து இழுத்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியே என்று கூறி உள்ளது.

எம் சென்ஸ் நிறுவனம் அப்படி கூறிவிட்டாலும் அதை அவ்வளவு இலகுவாக நினைத்துவிட முடியாது என்கின்றனர் சர்வதேச பொருளியல் வல்லுநர்கள். விரைவில் வேறு ஏதேனும் ரூபத்தில் மெட்டாவுக்கு சிக்கல் வரலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

click me!