முதல் சந்திப்பிலேயே போப்பாண்டவரை வசீகரித்த மோடி.. ஆரத் தழுவி 1 மணி நேரம் உருகி உருகி உரையாடினார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 3:30 PM IST
Highlights

இச்சந்திப்பின் போது வாட்டிகனில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், வத்திக்கான் நகர மாநில செயலாளர் கார்டினல் பியாட்ரோ பரோலினையும் மோடி சந்தித்தார்.

ஜி20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு முதல் முறையாக போப் ஆண்டவரை சந்தித்து உரையாற்றினார். வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பிற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சந்திப்பு நீண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், வறுமையை ஒழித்தல், கிரகத்தை மேம்படுத்துவது, கொரோனா தோற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி போப் இடையே விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

G20 இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இத்தாலி  சென்றடைந்தார், இத்தாலியின் பிரதமர் மரியோ டிராக்கியின் அழைப்பின் பேரில் அவர் அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை ரோமில்  ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மக்கள், கிரகம் மற்றும் செழிப்பு என்ற கருபொருளுடன் இத்தாலி ஜனாதிபதி தலைமையின் கீழ் இந்த ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொள்ளும் எட்டாவது  ஜி 20 மாநாடு இதுவாகும், முன்னதாக அக்டோபர் 30 அன்று மாநாட்டு மையத்தில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராக்கி வரவேற்றார்.  முன்னதாக வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி, ஆற்றல், வறுமை ஒழிப்பு, பொது உலகளாவிய எரிசக்தி உள்ளிட்டவற்றை வலுப்படுத்துதல் போன்ற பயனுள்ள பல்வேறு துறைகளில் இந்தியாவும் இத்தாலிக்கும்   இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மீண்டும் உலக தலைவர்களை சந்திக்க உள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹொசைன் லூங் ஆகியோருடனான சந்திப்பும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜி-20 மாநாட்டின் போது பிரதமர் மோடி ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி" குறித்த விவாதங்களிலும் மோடி பங்கேற்பார் என்று அந்த செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

முன்னதாக இந்தியா-இத்தாலி உறவுகளை பன்முகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகியுடன் வெள்ளிக்கிழமை விரிவான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இருதரப்பு கூட்டாண்மையின் ஐந்தாண்டு செயல் திட்டத்தை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர் என்றார்.

இந்த பல்வேறு சந்திப்பு திட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி பாரம்பரிய முறைப்படி வாடிகனில் போப் ஆண்டவர்  பிரான்சை சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பு வெறும் 20 நிமிடங்களுக்கு மட்டுமே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் வறுமையை ஒழித்தல் கிரகத்தை மேம்படுத்துவது கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல், மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி, போப் ஆகியோர் விவாதித்ததாக தகவல்  வெளியானது. பிரதமர் மோடிக்கும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்க்கும் இடையே நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். 2013-இல் போப் ஆனபிறகு பிரான்சை சந்திக்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

இச்சந்திப்பின் போது வாட்டிகனில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், வத்திக்கான் நகர மாநில செயலாளர் கார்டினல் பியாட்ரோ பரோலினையும் மோடி சந்தித்தார். அந்த சந்திப்பின்போது போப் ஆண்டவரை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். கடந்த 1999ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இரண்டாம் போப் ஜான்பால் இந்தியா வருகை தந்தார். இப்போது மோடியின் ஆட்சி காலத்தில் தான் போப்பாண்டவருக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!