பெருமூளையில் தாக்கிய நோய்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் தடுமாற இது தான் காரணம்..! வெளியான பகீர் தகவல்..!

By Kevin KaarkiFirst Published May 11, 2022, 10:42 AM IST
Highlights

இந்த பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஜி ஜின்பிங் அறுவை சிகிச்சை செய்து கொள்வதை தவிர்த்து, சீனாவின் பாரம்பரிய சிகிச்சை முறையை செய்து கொண்டுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பெருமூளை பகுதியில் தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாதிப்பினை சரி செய்வதற்கான சிகிச்சகளை ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு இறுதியில் எடுத்துக் கொண்டு இருந்தார் கூறப்படுகிறது. 

அறுவை சிகிச்சைக்கு மாற்றாக பாரம்பரிய சீன மருத்துவ முறைகளால் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. சீன முறைப்படி பாரம்பரிய சிகிச்சை முறைகளில் பெருமூளையில் உள்ள இரத்த குழாய்கள் மென்மையாகி, பாதிப்பை சுருங்கச் செய்யும். 

நோய் பாதிப்பு:

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பெருமூளை அனியுரிசம் என்ற பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் இந்த பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஜி ஜின்பிங் அறுவை சிகிச்சை செய்து கொள்வதை தவிர்த்து, சீனாவின் பாரம்பரிய சிகிச்சை முறையை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜி ஜின்பிங்கிற்கு ஏற்பட்டுள்ள பெருமூளை அனியுரிசம் பாதிப்பானது மூளையில் உள்ள ரத்த குழாய்கள் பலவீனம் அடைந்து வீங்கி, அதனுள் ரத்தம் நிரம்புவது ஆகும். மூளையின் அடிப்பகுதி மற்றும் மண்டை ஓடிற்கு இடையில் இந்த அனியுரிசம் ஏற்படும். அனியுரிசம் கசிந்தாலோ அல்லது சிதைவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும். உயர் ரத்த அழுத்தம், புகைப் பழக்கம், தலையில் அடி பட்டால் தான் பெருமூளை அனியுரிசம் ஏற்படும்.

மோசமான உடல்நிலை:

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது முதல் வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை ஜி ஜின்பிங் தவிர்த்துக் கொண்டே வந்தார். பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கும் வரை ஜி ஜின்பிங் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்காமல் இருந்தார். இதை அடுத்து 2019 மார்ச் மாத துவக்கத்தில் ஜி ஜின்பிங் இத்தாலிக்கு சென்றார். அங்கு இவரின் செயல்பாடுகள் வழக்கத்தை மீறிய ஒன்றாக இருந்தது என அப்போதே தகவல்கள் வெளியாகின.

இத்தாலியை தொடர்ந்து பிரான்ஸ் சென்ற அதிபர் ஜி ஜின்பிங் அங்கு உட்கார முயன்ற போது சற்றே தடுமாற்றம் அடைந்து மெல்ல கைத் தாங்கலாகவே அமர்ந்தார். இதேபோன்று 2020 அக்டோபர் மாதம் ஷென்சென் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி ஜின்பிங் தாமதமாக தோன்றி உரையாற்றினார். மேலும் இவரது உரை வழக்கத்தை விட மிகவும் தொய்வு அடைந்த நிலையில் இருந்தது என பரவலாக கூறப்பட்டது. அப்போது இவரின் உடல்நிலையில் பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

பொருளாதார நெருக்கடி:

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு, வினியோக பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சீனாவின் ஜீரோ கோவிட் திட்டம் உள்ளிட்ட காரணிகளால் சீன பொருளாதாரம் நெருக்கடி சூழலில் உள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்கள் முதலீட்டாளர்களை சிந்திக்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் போட்டி:

சீன அதிபராக மூன்றாவது முறை பதவியேற்கும் நோக்கில் ஜி ஜின்பிங் முதற்கட்ட பணிகளை துவங்கி இருக்கிறார். இவரது ஆட்சியில் சீன பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருப்பதாக கூறி தன்னை முன்னிறுத்தும் பணிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில், ஜி ஜின்பிங் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

click me!