மூன்று மாதத்திற்கு பிறகு சீனாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு புதியதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. சீனாவில் 3,255 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர். உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரையிலும் 11 ஆயிரத்திற்கும் அதிகமனோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே மூன்று மாதத்திற்கு பிறகு சீனாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு புதியதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் வுகான் தற்போது உலகிற்கு நம்பிக்கை ஊட்டி இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 20ம் தேதி ஜெனிவாவில் நடந்த கொவைட்-19 நோய் கூட்டத்தில் பேசிய அதன் தலைமை இயக்குநர் தெட்ரோஸ், வுகான் நகரில் கடந்த 2 நாட்களில் கொரோனா பாதிப்புக்குப் புதிதாக எவரும் ஆளாகவில்லை என்பது உலகின் பிற பகுதிகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது என்றார். மிக சாதகமற்ற நிலையில் இருந்தும் மேம்பாடு அடைய முடியும் என்பதையே வுகான் உணர்துவதாகவும் அவர் பேசினார்.
கொரோனா கொடூரத்தின் முக்கியமான 3 மற்றும் 4 வது வாரம்..! எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை..!
உலகளவில் தனிநபருக்கான பாதுகாப்பு வசதிகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நாடுகளுக்கும் உதவி வருவதாக குறிப்பிட்ட தெட்ரோஸ் சீனாவில் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் அதற்கு தொடர்புடைய பொருட்களைத் தயாரித்து வழங்குவதை தங்கள் அமைப்பு உறுதிபடுத்தி இருப்பதாகவும் கூறினார்.