இந்தியாவை பாசத்தோடு அழைத்து ரகசியத்தை சொன்ன சீனா...!! நெருங்கிய பத்துநாடுகளிடம் பகிர்ந்து கொண்ட தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 21, 2020, 12:49 PM IST
Highlights

சீனா கொரோனா   தாக்குதலில் இருந்து விடுபட்டு வரும் நிலையில் அந்த வைரசால் தாங்கள்  சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவர்கள், சிகிச்சை முறைகள், மற்றும் அந்த வைரசை எதிர்கொண்ட முறைகள் குறித்து  தோழமை நாடுகளுடன் பகிருந்து கொள்ள திட்டமிட்டது.  அதன் அடிப்படையில் 

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சீனா நடத்திய வீடியோ கான்பிரன்சில்  இந்திய சுகாதாரத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள்  கலந்து கொண்டனர் .  அண்டை  மற்றும் தோழமை நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் சீனா நடத்திய வீடியோ கான்பரன்சில் இலங்கை பாகிஸ்தான் ,  பங்களாதேஷ் உள்ளிட்ட  ஆசிய நாடுகளும் கலந்து கொண்டன .  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது .  சீனாவில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில சுமார் 3500 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  

உலகளவில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உலகளவில் இந்த வைரசுக்கு  பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது .  இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டு வரும்  தெற்காசிய நாடுகளான,   இந்தியா ,  பாகிஸ்தான் ,  பங்களாதேஷ் ,  இலங்கை ,  உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ்  தாக்கம் தீவிரமாக உள்ளது  .  இந்நிலையில் கொரோனா  வைரஸ் தோன்றிய வூக்கான்  நகரில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது .  சீனாவின் கொரோனா  வைரஸ் வலுவிழந்து நோய் தாக்கம் குறைந்துள்ள  நிலையில் அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர் .  சீனா கொரோனா   தாக்குதலில் இருந்து விடுபட்டு வரும் நிலையில் அந்த வைரசால் தாங்கள்  சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவர்கள், சிகிச்சை முறைகள், மற்றும் அந்த வைரசை எதிர்கொண்ட முறைகள் குறித்து  தோழமை நாடுகளுடன் பகிருந்து கொள்ள திட்டமிட்டது.  அதன் அடிப்படையில். 

ஐரோப்பிய-ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் சீனா வீடியோ கான்பிரன்சிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது . இதில்  அண்டை நாடுகள் மற்றும் தோழமை நாடுகளை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட நாடடுகள்  கலந்து கொண்டன. இந்நிலையில்  இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்  இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுத்தார்.   அதில்,  சீனா நட்புணர்வுடன்,  தன் அண்டை நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறது  எனவும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .  இந்நிலையில் அதை ஏற்ற இந்தியா  வீடியோ கான்பரன்சில் கலந்து கொண்டது , அதில்  இந்திய வெளியுறவு மற்றும் இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்  கொரோனா  வைரஸ் குறித்து சீனா பகிர்ந்துகொண்ட தகவல்கள் நிச்சயம்  இந்தியா போன்ற நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

 

click me!