சீனாவை விஞ்சி இத்தாலியில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 4,023 ஐ எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் பரவ தொடங்கி இத்தாலி, ஈரான், ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா, பாகிஸ்தான் என 155 க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரையிலும் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பது உறுதியாகி தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
சீனாவை கொரோனா புரட்டிப்போட்ட நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 3,255 பேர் பலியாகி இருகின்றனர். சீனாவை விஞ்சி இத்தாலியில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 4,023 ஐ எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் பலியாகி உள்ளனர். 47 ஆயிரத்திற்க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கரோனாவால் 2,75,255 பேர் பாதிக்கப்பட்டு 91,912 பேர் குணமடைந்திருக்கின்றனர். இத்தாலி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் 1433 பேரும் ஸ்பெயினில் 1043 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தண்டவாளத்தில் தலை வைத்து செல்பி..! திருமணமான கையோடு விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி..!
இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 258 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கேரளாவில் 40 பேர் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.