World War 3: ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ? மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்.. ரஷியாவுக்கு சவால் விடும் அமெரிக்கா !

By Raghupati R  |  First Published Mar 12, 2022, 8:47 AM IST

உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அதேபோல் அந்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் உள்ளது. ஆனால் தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை ரஷிய படையால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை.


போர் நிறுத்தம் :

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். இதனால் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தியபடியே இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் கீவ் உள்ளிட்ட 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.

Tap to resize

Latest Videos

இதனால் உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்து வந்தாலும் மறுபுறம் ரஷியா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு நாடுகளின் குழுவினர் 3 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே இருநாடுகளின் உயர்மட்ட குழுவான வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை உடனே ரஷியா நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ரஷியா ஏற்க மறுத்துவிட்டது.

தலைநகர் கீவில் ரஷியா :

ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததை அடுத்து ரஷியாவின் தாக்குதல் இன்றும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்நகரை பிடிக்க வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து ரஷியாவின் பெரும் படை 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து முன்னேறி வந்தது. 

நேற்று முன்தினம் கீவ் நகரை ரஷிய படைகள் மிகவும் நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தலைநகர் கீவ்வை ரஷிய படைகள் நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கீவ்வின் புறநகர் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ரஷிய படைகள், நகருக்குள் நுழைய முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுக்க உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

ரஷிய படைகளின் அணிவகுப்பு தலைநகர் கீவ்வுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காட்டும் செயற்கைகோள் படம் வெளியிடப்பட்டது. இந்த அணிவகுப்பு கடைசியாக அன்டோனோவ் விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் காணப்பட்டது. வடக்கே உள்ள அணிவகுப்பின் மற்ற பகுதிகள் லுபியங் அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் வடமேற்கில் உள்ள லூட்ஸ்க் மற்றும் டினிபர்நதி அருகே அமைந்துள்ள மத்திய கிழக்கு நகரமான டினிப்ரோ ஆகிய 2 நகரங்களில் முதல் முறையாக குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் :

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசினார். அப்போது, ' ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்போம். முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம், நேட்டோவை பலப்படுத்துவோம். உக்ரைனில் ரஷியாவுக்கு எதிராக நாங்கள் போரிட மாட்டோம்.  நேட்டோவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான நேரடி மோதலே மூன்றாம் உலகப் போர். 

கிரம்ளின் மூன்றாம் உலக போரை தூண்டுகிறது.அதை தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். உக்ரைனில் ரஷியாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக ரஷியா கடுமையான விலை கொடுக்க நேரிடும்.அவர் சண்டையின்றி உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று நம்பினார், அவர் தோல்வியுற்றார். உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்க மக்களும் உலகமும் ஒன்றுபட்டுள்ளன' என்று கூறினார்.

click me!